Posts

உணர்வு!!!

Image
  அப்போது கேட்ட மழை, இப்போது விழுகிறது. ஆனால்! இப்போது அந்த மழையை ரசிக்கும் நிலைப்பாட்டில் மனம் இல்லை. அப்போது கேட்ட சந்தோஷம், இப்போது கண்முன் விரிகிறது. ஆனால்! முழுதாய் கொண்டாட ஆவலில்லை. அப்போது கேட்ட வரங்கள், இப்போது மெல்ல எட்டிப் பார்க்கிறது. ஆயினும்! அப்போதைக்கான துயரம் நீங்கப் போவதில்லை. அப்போது கிடைக்காத தோள்கள், இப்போது வந்து ஒட்டிக் கொள்கிறது. "வராமலே இருந்திருக்கலாம்" என்றுதான் தோன்றுகிறது. அப்போது அழுத கண்ணை, காய்ந்து வரண்ட பின் இப்போது ஒரு கரம் வந்து, ஏந்துவதாகச் சொல்கிறது. "தேவையே இல்லை" அப்போது அந்தக் கண்ணீரின் பெருமானம் வேறு. எல்லாமும் ஒருவேளை பிற்பாடு நடந்தேறலாம்தான். ஆனா! எல்லாவற்றையும் எப்போதுமே ஒரேமாதிரி உணரப்பிடிக்கிறதில்ல. தக்க நேரத்துல இல்லாமல் போன யாவுமே எப்போதைக்குமான அழியாத சோகம்தான். அந்தந்த நேரத்துக்கான தீரா துயரத்தை, அதீத கொண்டாட்டத்தை, வேற எப்பவுமே பூரணப்படுத்த ஏலாது. இதற்கிடையில எத்தனையோ மனுஷங்க நம்மை விட்டு நீங்கிப்போய்ட்றாங்க. நிம்மதி, ஆறுதல், பேச்சித் துணைக்கு ஆள், நாம சந்தோசமா இருக்குறப்ப கூடவே அதுல கலந்து மகிழ்விக்க ஒரு மனுசன், அழு

அன்பின் வேலி

 கட்டுப்படுத்தலுக்கும் பாதுகாத்தலுக்கும் சிறு வித்தியாசம்தான்  உன்னை சுற்றி வேலிகள் அமைத்தல் - கட்டுப்படுத்தல்  அதன் சாவிகளை உன்னிடமே தந்துவிடல் - பாதுகாத்தல் தாண்டிச் செல்..  மீண்டும் வா..  அன்பின் வேலிகளில்  எப்பொழுதும் முட்கள் இருப்பதில்லை

காதலெனும் கஞ்சா செடி

 #காதலெனும்_கஞ்சா_செடி  இந்த ஆண்கள் எனும் மகா கேனயனுங்க தான் காதல் போனப்றமும் Move On ஆகாம உக்காந்து கதறிட்டு கிடக்கானுக.  ஆனா அவளுங்க புள்ளக்குட்டிய பெத்து நல்ல உசாராத்தான் யா வாழ்க்கைய கொண்டு போறாளுங்க.  இவனுங்க தான் தும்புதடி சைஸ்ல ஒரு தாடிய வளர்த்துக்கிட்டு, அவ விட்டுட்டு போன அதே எடத்துல பொறக்கி எடுத்த அவ முந்தானியயும் வச்சி இன்னும் மோந்துட்டு இருக்கானுக. (விதிவிலக்காய் உள்ளதுக்கு தனியா சட்டம்லாம் எழுத முடியாது)  ஜானுவும் சிங்கப்பூர்ல  மாப்ள கூட செட்டில் ஆயிட்டா!  ஜெஸ்ஸியும் கேரளால மாப்ள கூட செட்டில் ஆயிட்டா!  ஆனா! தோ இருக்கானே ராம் இவன் வெர்ஜின். (என்னக் கொடும சரவணன் ச்சே)  நம்ம கார்த்திக்க பத்தி சொல்லவே தேவல சுத்தோ! சுவர் கிடைச்சாலும் ஜெசின்னு தான் சொறிவான். செவனேன்னு யுத்தம் செஞ்சிட்டு இருந்த மனுசன் அந்த ஹிட்லர். ஒலகமே அவர் பேர கேட்டா மூத்திரம் போச்சி. ஆனா! காதலி மடில படுத்தொன்னே என்னாச்சு? "என் குஞ்சி மீசையில் குயில் வளர்த்தவளே" அப்டின்னு கவுத எழுதி அங்கனக்குள்ளயே படுத்துட்டாரு.  தோ நம்ம ஷாஜகான், எதிரிகளை எல்லாம் கம்பீரமா தன்னகத்தே மடிய வச்சவரு. ஆனா மும்தாஜை மார்க்கெட

ANBIN THOLVI

Image
  உடனிருப்பதாய் சத்தியம் செய்பவர்கள் எல்லோருமே என்றைக்கும் உடனிருப்பதில்லை! வெகு சிலர் விதிவிலக்காய் இருப்பார்கள். வேறு யார் யாரோ அவ்வப்போது நம் வாழ்வினில் வந்து உடனிருக்கிறார்கள். துயர் துடைப்பார்கள். சந்தோஷத்தினை வழங்கிச் செல்வார்கள். அப்போதைக்கு அவர்கள் வெகு நீளமான உறவொன்றின் அடித்தளமாய் தெரிகிறார்கள். மனம் அப்போது குதூகலப்பட்டுக் கொள்ளும். காலம் தன்னகத்தே வேறு சில தீர்மானங்களை கொண்டிருக்கும். மெல்ல மெல்ல அவர்களை விலக நேரிடும். உரையாடுவதற்கான நேரமின்மை தான் முதலில் அவர்களிடமிருந்து நம்மை தூரப்படுத்தும். அதுவே காலப்போக்கில் நீட்சி பெற்று, அந்நியப்பட்டு போகக் கூடும். மலைத்துப் பார்த்தவை எல்லாம் சளைத்துப்போன பட்டியலுக்குள் இடம் பிடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும். ஆதலால்...! வாழ்வின் அந்தந்த கணங்களில் மட்டும் வாழ்ந்து விடப் பழகுதல் மேலானது. பின்னாட்களில், இல்லாமைகள் தருகின்ற வெறுமையெனும் பெருவெளி இருக்கிறதே??? அது முழு வாழ்வுக்குமான உயிர்ப்பையே அழித்துச் சாம்பலாக்கி விடும். வேறெதையும் செய்ய முடியாது, நம்மை தவிக்க விடும். நம்முடைய அடையாளம் இத்துனை மாறி விட்டதே என, நம் சுயம் அப்போது தான்